அமேசான் நிறுவனரை விமர்சித்த எலான் மஸ்க்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தளம் ஒன்றை ஜெஃப் பெசோஸ் அறிவித்த சில நிமிடங்களில் "Haha no way," என்று சிரிக்கும் ஈமோஜியை தமது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டு, அதைத் தொடர்ந்து ஒரு பூனை ஈமோஜியுடன் "copy" என்று பதிவிட்டுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய ஜெஃப் பெசோஸ், தற்போது புராஜெக்ட் புரோமிதியஸ் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்துள்ளார்.
முன்னாள் கூகுள் எக்ஸ் விஞ்ஞானி விக் பஜாஜ் உடன் இணைந்து இந்த நிறுவனத்தை பெஸோஸ் வழிநடத்தவுள்ளார்.
தொழில் போட்டியாளராக உள்ள ஜெஃப் பெசோசை அவ்வப்போது விமர்சித்து எலான் மஸ்க் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது