எலான் மஸ்கின் அதிரடி முடிவு: காசா நகருக்கு இணையதள சேவை!
காசா நகரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க x நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ம் திகதியில் இருந்து தாக்குதல் தொடுத்து வருகின்றது.
இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 22-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலை அடுத்து காசாவின் தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், இணையதள சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், காசா நகருக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார் லிங்க் வழங்க இருக்கிறது. எலான் மஸ்க் இந்த அறிவிப்பை x இணையதளம் ஊடாக வெளியிட்டுள்ளார்.
Starlink will support connectivity to internationally recognized aid organizations in Gaza.
— Elon Musk (@elonmusk) October 28, 2023