5,000 மைல் வேகத்தில் நிலவில் மோதும் எலன் மஸ்கின் ராக்கெட்!
எலான் மஸ்கின் ((Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் ஒன்று நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிரபல பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் (SpaceX)உருவாக்கிய ஃபால்கன் 9 ராக்கெட் 2015 ஆண்டு விண்வெளிக்கு அனுப்பபட்டது. வானிலை தொடர்பான ஆய்வுக்காக குறித்த ராக்கெட்டில் செயற்கைக்கொள் அனுப்பிவைக்கப்பட்டது.
குறித்த ராக்கெட் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதைக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் செயற்கைக்கோளில் இருந்து ராக்கெட் தனியாக பிரிந்து சென்றது. ராக்கெட் தனது பணியை முடித்த பிறகு பூமியை நோக்கி திரும்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லாமல் போனதால் விண்வெளியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில், குறித்த ராக்கெட் கடந்த 7 வருடங்களாக பூமி, நிலவு மற்றும் சூரியனின் வெவ்வேறு ஈர்ப்பு விசைகளால் ராக்கெட் இழுக்கப்பட்டு விண்வெளியில் முற்றிலும் குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வந்தது.
இதேவேளை குறித்த ராக்கெட் வரும் மார்ச் 4 ஆம் திகதி (2022) நிலவில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நான்கு டன் எடையுடைய இந்த ராக்கெட் மணிக்கு 5,000 மைல் வேகத்தில் நிலவின் மேற்பகுதியில் வந்து மோத உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மேலும், இவ்வளவு வேகத்தில் மோதினாலும் நிலவில் அதன் பாதிப்பு மிக சிறிய அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிலவில் மோதும் பட்சத்தில் ‘நிலவில் மோதும் கட்டுப்பாடற்ற முதல் ராக்கெட்’ இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021