டுவிட்டரின் புதிய C.E.Oவை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! வைரலாகும் டுவீட்
டுவிட்டரின் புதிய C.E.O இவர்தான் என அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) புகைப்படம் வெளியிட்டு அறிமுகப்படுத்தி உள்ளார்.
டுவிட்டருக்கான C.E.O. பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை மஸ்க் ஈடுபட்டார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையிலான நபரை தேடும் பணியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இதன்படி, அவர் புதிய C.E.O.வை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கியை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார்.
மேலும், மற்ற C.E.O.க்களை விட சிறந்த சி.இ.ஓ.வாக தனது பிளாக்கி இருக்கும் என மஸ்க் உணருகிறார்.
இது தொடர்பில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள மஸ்க், அதில், C.E.O. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது.
அதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் C.E.O. என்று எழுதியபடியும் காணப்படுகிறது.
மேலும் அதற்கு முன்னாள் மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் மேல், கையெழுத்திற்கு பதிலாக பிளாக்கியின் கால் தடங்களும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளன.
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023
ஏதேனும் அவசர மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என பிளாக்கி விரும்பினால் அதற்கு உதவுவதற்கு ஏற்ற வகையில், டுவிட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் உள்ளது.
இந்த புகைப்படம் வெளியிட்டு, டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் தெரிவித்துள்ளார்.