எலான் மஸ்கின் வைரல் டுவிட்டர் பதிவு! விரைவில் புதிய சமூகவலைதளம்?
எலான் மஸ்கின் (Elon Musk) புதிய சமூகவலைத்தளம் குறித்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலக பணக்காரர்களின் ஒருவரான இவர் தான் விரைவில் ஒரு சமூக வலைத்தளத்தை தொடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்கை குறிப்பிட்டு கேள்வியெழுப்பிய நபர் ஒருவர்,
" நீங்கள் ஒரு புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்க பரிசீலிக்கிறீர்களா? பேச்சு சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கடைபிடிப்பது தொடர்பானவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு சமூக வலைத்தளம் தேவை என்று நான் நினைக்கிறேன்" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் " அது பற்றி நான் தீவிரமாக சிந்தித்து கொண்டு இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.