எலான் மஸ்கின் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் மாணவர்
எலான் மஸ்க்(Elon Musk) தற்போது ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக ரகசியமாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்(Elon Musk) . உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவராக விளங்கும் இவர் ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இவரது தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் டுவிட்டர் கணக்கான எலான் ஜெட் (Elon Jett) தெரிவித்துள்ளது.
இந்த டுவிட்டர் கணக்கை 19 வயதான ஜாக் ஸ்வீனி (Jack Sweeney)என்ற மாணவர் நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
It would appear Elon Took off from Austin headed to Berlin on N502SX, the third SpaceX Gulfstream Aircraft pic.twitter.com/8KVSRIMWTj
— Elon Musk's Jet (@ElonJet) March 21, 2022