பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஒன்றை வார்த்தையால் வைரல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மையை டாவோஸ் மாநாடு அசைத்துப்பார்த்துள்ளது. கண்கணில் உபாதை ஏற்பட்டதை அடுத்து, சன்கிளாஸ் அணிந்து வந்த மக்ரோன், பெரும் பேசுபொருள் ஆனார்.
அவர் தெரிவித்த For sure எனும் ஆங்கில வார்த்தையும் வைரலானது. அதை அடுத்து, அவரது பிரபலத்தன்மையும் அதிகரித்துள்ளது.

சென்ற டிசம்பரில் 25% சதவீத பிரபலத்தன்மையுடன் இருந்த மக்ரோன், இந்த டாவோஸ் வர்த்தக மாநாட்டின் பின்னர் அவரது செல்வாக்கு 2 புள்ளிகளால் அதிகரித்து, தற்போது அவர் 27% சதவீத பிரபலத்தன்மையோடு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஜனாதிபதி மக்ரோன் மிக வலுவான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். உடனடியாகவே அவரது கருத்துக்கள் பிரபலமடைந்திருந்தன. அதை அடுத்தே அவரது பிரபலத்தன்மையும் அதிகரித்தது.