வேலை நேரத்தில் மது அருந்திய ஊழியருக்கு 42,000 பவுண்ட் இழப்பீடு வழங்க உத்தரவு!
ஸ்பெயின் நாட்டில் வேலையின்போது மது உட்கொண்ட ஊழியரை வேலையிலிருந்து நீக்கியது தவறு என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மின்னியல் தொழில்நுட்பப் பொறியாளர் மது அருந்தியதால் போதையில் இருந்ததோ வேலைக் கடமைகள் சரிவரப் பூர்த்தியாகவில்லை என்பது நிரூபிக்கப்படவில்லை.
42,000 பவுண்ட் இழப்பீடு
அவர் மது அருந்தியதற்குச் சுற்றுப்புறத்தின் வெப்பம் காரணமாக இருந்திருக்கலாம் என நிறுவனம் கருத்தில்கொள்ளவில்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த நிறுவனத்தில் 27 ஆண்டுகளாக வேலை செய்த அந் நபர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
விசாரணை நடத்த நிறுவனம் நாடிய தனியார்த் துப்பறிவாளரின் உதவியோடு அவர் வேலை நேரத்தின்போது மது உட்கொண்டு பணியில் இருந்தது தெரியவந்தது.
எனினும் அவர் வேலையில் ஓய்வு நேரத்தின்போது மட்டுமே மது அருந்தினார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அத்துடன் ஊழியர் எவ்வளவு மது அருந்தினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
எனவே நிறுவனம் அவரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது 42,000 பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பளித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.