பணியாளர்களின் பாதுகாப்பு, மகிழ்ச்சி: உலக அளவில் முதல் 5 இடங்களை பிடித்த நாடுகள்!
பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களின் உடல், மனம், சமூகம் மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களின் நலனுக்கான உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்காக மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன.
மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், 25 சதவீதத்துடன் கடைசி இடத்தில் ஜப்பான் உள்ளது.
கடைசி ஐந்து இடங்களுக்கான வரிசையில், ஜப்பானுக்கு அடுத்து பிரித்தானியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் 78% பெற்ற துருக்கி நாடு முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து 76% பெற்ற இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, சீனா 75% பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகள் முறையே 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளன. இதன் உலகளாவிய சராசரி 57% என்ற அளவில் உள்ளது.