கூகுள் நிறுவனத்தின் CEO அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்!
இந்த ஆண்டும் பணிநீக்கம் தொடரும் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்த நிலையில் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அண்மைய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் வரும் மாதங்களில் மேலும் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த பணிநீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும்.
இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது. அதேபோல் எல்லா குழுக்களிலும் இரு்ககாது என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிக்ஸல், பிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனங்களில் கடந்த ஆண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பனிநீக்க நடவடிக்கை தொடரும் என சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 10 நாளில் மட்டும் கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தில் இருந்து சுமார் 1000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.