முடிவுக்கு வராத போர்; இந்தியாவிடம் கெஞ்சும் உக்ரைன்!
ரஷ்யாவுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போரை நிறுத்துமாறு, இந்தியாவை உக்ரைன் மீண்டும் அறிவுறுத்தி கேட்டுக்கொண்டது.
உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா(Dimitro Guleba), பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தராக செயல்பட்டால் அதனை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று கூறினார்.
ரஷ்யாவுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போரை நிறுத்துமாறு, இந்தியாவை உக்ரைன் மீண்டும் அறிவுறுத்தி கேட்டுக்கொண்டது.
சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா(Dimitro Guleba) கூறியதாவது, “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலின்ஸ்கி(Volodymyr Zelensky)க்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும்(Vladimir Putin) இடையே மத்தியஸ்தராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட விரும்பினால், அவரது முயற்சியை வரவேற்போம்.
உக்ரைன் இந்திய தயாரிப்புகளின் நம்பகமான நுகர்வோர். நாங்கள் எப்போதும் சூரியகாந்தி எண்ணெய், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
இது வழக்கத்திற்கு மாறாக பயனுள்ள உறவு. ரஷ்யாவுடன் இந்தியா அனுபவிக்கும் உறவைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.போரை நிறுத்துமாறு அதிபர் விளாடிமிர் புடினை(Vladimir Putin) சமாதானப்படுத்தவும்.
ரஷ்யாவில் முடிவெடுக்கும் ஒரே மனிதர் அதிபர் புடின்(Vladimir Putin) மட்டுமே.எனவே, இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்று அவருடன் நேரடியாகப் பேச வேண்டும்.
இந்த உலகத்தில் இந்த போரை விரும்பும் ஒரே நபர் அதிபர் புடின்(Vladimir Putin) மட்டுமே. உக்ரைனை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று நம்புகிறேன்" என்றார். கார்கிவ் நகரில் ரஷ்ய குண்டுவெடிப்பின் போது இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு உக்ரைன் மந்திரி தனது இரங்கலையும் தெரிவித்தார்.
மேலும், “ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பு வரை, உக்ரைன் இந்தியர்களின் இன்னொரு தாயகமாக விளங்கியது. மாணவர்கள் திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.