மனைவியின் மரணத்துடன் கணவருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு
கனடாவில் இட்டாபிகொக் பகுதியில் பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது டொரன்டோ போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னதாக வீதி ஓரத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த பெண் மீட்கப்பட்டார்.
கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த பின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கேமா வீதி மற்றும் எவன்ஸ் வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 43 வயதான கத்தரின் ஜோலரானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் 48 வயதான 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.