மற்றுமொரு நாட்டில் பயன்பாட்டிற்கு வரும் யூரோ!
புத்தாண்டை இரண்டு முக்கிய மாற்றங்களோடு வரவேற்றுள்ளதாக ஐரோப்பிய நாடான குரோஷியா அறிவித்துள்ளது. அதில் ஒன்று குரோஷியா நாட்டில் யூரோ நாணயம் பயன்பாட்டிற்கு வருகின்றது.
இதுவரை குரோஷியா குனா (kuna) எனும் சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வந்தது.
அதுமடுமல்லாது ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணம் செய்ய இனி குரோஷிய மக்களுக்குக் கடவுசீட்டு தேவையில்லை.
அதன்படி 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய மண்டலத்தில் இனி குரோஷிய மக்கள் சரளமாகப் பயணம் செய்யலாம்.
400 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பிய மக்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் சுலபமாகப் பயணம் செய்ய உதவும் திட்டமாகும்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் குரோஷியா சேர்ந்து சுமார் 10 ஆண்டாகும் நிலையில் இந்த மாற்றங்கள் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.