ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம்!
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது.
கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருவர் உயிரிழப்பு
சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா, ஹங்கேரி, செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆம்பர் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்பர் எச்சரிக்கை என்பது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்க கூடிய கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறிக்கும் எச்சரிக்கையாகும்.