டொரண்டோவில் உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள தி எனெக்ஸ் The Annex பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெட்ஃபோர்ட் மற்றும் டேவன்போர்ட் சாலைகளுக்கு அருகே செவ்வாய் இரவு 11:30க்கு முன்னர் நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டின் சான்றுகளைக் கண்டதாகவும், உணவகத்தின் ஜன்னல்களில் குறைந்தபட்சம் எட்டு துளைகள் இருப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேகநபர் பற்றிய விவரங்கள் அல்லது சுட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூடு நடந்த உணவகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் போது அந்த இடம் திறந்திருந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.