சாட்ஜிபிடியை நம்ப வேண்டாம் ; உருவாக்கியவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், இந்தத் தொழில்நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்பது தவறு செய்யவே செய்யாது என்றில்லை என்றும், அது தவறான தகவல்களையும், கணிக்க முடியாத முடிவுகளையும் உருவாக்கக்கூடியதே என்றும் ஆல்ட்மன் தெளிவாக விளக்கினார். எனவே அதை முழு அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சாட்ஜிபிடிக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரே இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"மக்கள் சாட்ஜிபிடி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஆனால், அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும்" என்று அவர் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி எங்கள் தயாரிப்பாக இருந்தாலும் குறித்து சில உண்மைகளை நேர்மையாக பேச வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மை தன்மை என்பது மிக சிறப்பானது அல்ல" என்றும் அவர் கூறினார்.