ஒன்றாரியோவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
ஒன்றாரியோவில் காணாமல் போனதாக கூறப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளாரிங்டனில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையோரத்தில் உயிரில்லாமல் கிடந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை கண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரை அன்றைய தினம் காலை குடும்பத்தினர் காணவில்லை என புகார் செய்திருந்தனர் என டர்ஹம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிற்பகல் 1:20 மணியளவில் ஒரோனோ Orono பகுதியில் உள்ள கொன்செஷன் வீதி Concession Road 6 மற்றும் விக்கர்ஸ் வீதி Vickers Road இடத்தில், சுயநினைவற்ற நிலையில் ஒருவர் கிடப்பதை காவல்துறையினர் கண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில், அந்த நபர் கிழக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது எதிரே வரும் பாதைக்கு திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளிலிருந்து வீசி எறியப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர்.
அந்த நபர் 47 வயதுடையவராகும். இவரது அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் உடல்நலக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தற்போதைய நிலவரத்தில் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.