15 வயது சிறுமி மீது தீவைத்த 14 வயது சிறுமி: சமீபத்திய தகவல்
கனடாவிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடன் பயிலும் சக மாணவி மீது தீவைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, கனடாவின் Saskatoon மாகாணத்தில் அமைந்துள்ள Evan Hardy Collegiateஇல் படிக்கும் 14 வயது சிறுமி, தன் சக மாணவியான 15 வயது சிறுமி மீது தீவைத்தாள்.
உடனடியாக ஆசிரியைகள் தீயை அணைக்க முயன்றாலும் அந்த மாணவி படுகாயமடைந்தாள்.
அவள் மீது தீவைத்த 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவளை வயது வந்த நபராக கருதி, அவளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்னொரு பக்கமோ, அந்த சிறுமிக்கு மன நல பாதிப்பு உள்ளதாகவும், அவள் மன நல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவளுக்கு ஆட்டிசக் குறைபாடு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீவைக்கப்பட்டதால் படுகாயமடைந்த அந்த 15 வயது மாணவி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.