மலேசியாவின் முன்னாள் பிரதமர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!
மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இவருக்கு 98 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்த்தொற்று ஏற்பட்டதால் தேசிய இதயநோய் மருத்துவமனையில் மகாதீர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மகாதீர் முதுமைசார்ந்த உடல்நல பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதய நோய் தீவிரமடைந்த நிலையில், அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தற்போதைய துணை பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மகாதீரால் கலந்துகொள்ள முடியவில்லை.
எனவே, ஜூலை 19-ம் திகதி விசாரணையை தொடர்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.