அமெரிக்காவில் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இந்த சம்பவம் 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்றைய தினம் (20-09-2022) நிகழ்ந்துள்ளது.
இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன.
இதனால் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது. இது தொடர்பில் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் சிலர் இடிபாடுகளியில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.