35 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த சகோதரிகள்... நெகிழ்ச்சி சம்பவம்
இரண்டு நாடுகளில் தத்து எடுக்கப்பட்ட சகோதரிகள் 35 ஆண்டுகளின் பின்னர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
அஷ்லியா பிறவுன் மற்றும் லாவுரின்டா கொலாடோ ஆகிய சகோதரிகளே இவ்வாறு 35 ஆண்டுகளின் பின்னர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
டொமினிக்கன் குடியரசுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த இந்த இரண்டு குழந்தைகளும் இரு வேறு நாடுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்டனர்.
ஐந்து மாத சிசுவான கொலாடோ அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினரால் தத்து எடுத்து வளர்க்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் பிறந்த அவரது சகோதாரி பிறவுண் ஆறு வார சிசுவாக இருந்த போது பார்பேடோஸை சேர்ந்த தம்பதியினரால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டார்.
பிறவுனின் குடும்பம் பின்னர் கனடாவின் ஒன்றாரியோவிற்கு குடிப்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதின்ம வயதினை அடைந்த போது தாங்கள் தனித்து பிறக்கவில்லை என்பதனை அறிந்து கொண்டனர்.
எனினும் சகோதரியை கண்டு பிடிக்க எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் சகோதரியை தாம் தேடியதாக கொலாடோ தெரிவிக்கின்றார்.
தத்து எடுத்தல் தொடர்பான இணைய தளங்களில் தாம் சகோதாரியை நீண்ட காலம் தேடியதாகவும், 17 ஆண்டு தேடுதலின் பின்னர் சகோதாரியை கண்டு கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மரபணு பரிசோதனை மூலம் சகோதரியை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
சகோதரியை கண்டு பிடித்த்தன் பின்னர் சில மாதங்கள் சமூக ஊடகங்களின் ஊடாக தொடர்பு பேணியதாக குறிப்பிடுகின்றார்.
பின்னர் முதல் தடவையாக நயாகர நீர்வீழ்ச்சி பகுதியில் வைத்து சகோதாரியை நேரில் கண்டதாக அவர் தெரிவிக்கின்றார்.