111 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ அதிகாரியின் உடலை கொண்டு வர கனடியக் குடும்பம் போராட்டம்!

Canada
By Kamal Jul 05, 2026 04:56 PM GMT
Report

முதலாம் உலகப் போரில் உயிரிழந்து, 111 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டறியப்படாமல் இருக்கும் கனடிய ராணுவ அதிகாரி ஒருவரின் உடலைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் கனடாவிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்டாரியோவின் சவுத்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த லெப்டினன்ட் லியோனல் ட்ரான்டர் என்பவர், 1915 ஜூன் 15 அன்று தனது 28-வது வயதில் முதலாம் உலகப் போரில் களம் இறங்கி உயிரிழந்தார். ஆனால், அவரது உடல் என்னவானது என்ற விவரம் தெரியாமல் அவர் மாயமானார்.

அவரது சொந்த ஊரில் அவருக்காக ஒரு வெற்று கல்லறை மட்டுமே நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.

111 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ அதிகாரியின் உடலை கொண்டு வர கனடியக் குடும்பம் போராட்டம்! | Family Hopes To Bring Home Great Great Uncle

இது குறித்து அவரது எள்ளுப் பேத்தி அலிசியா கூறுகையில், "அந்த வெற்று கல்லறைதான் எங்களுடன் பேசுகிறது.

அவர் வீட்டிற்கு எழுதிய உணர்வுபூர்வமான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் தலைமுறை தலைமுறையாக எங்களிடம் உள்ளன.

அவர் மறைந்தது எங்கள் குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த உடலைத் தேடும் பணிக்காக, அகாடியா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான ஆரோன் டெய்லரின் உதவியை அலிசியா நாடியுள்ளார்.

பேராசிரியர் டெய்லர் ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறைக்காகப் போரில் மாயமான வீரர்களைக் கண்டுபிடித்துத் தந்த அனுபவம் கொண்டவர்.

இதுவரை கிடைத்துள்ள போர் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள 'கிவென்சி' என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒரு வயல்வெளியில், அடையாளம் தெரியாத ஒரு கல்லறையில் ட்ரான்டர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் டெய்லர் கணித்துள்ளார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 'கிரவுண்ட்-பெனட்ரேட்டிங் ரேடார்' போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் பிரான்ஸ் சென்று தேடத் திட்டமிட்டுள்ளார்.

பேராசிரியர் டெய்லர், முந்தைய போர்களில் காணாமல் போன வீரர்களின் குடும்பங்களுக்காக "கனடியன் ரிமெம்பரன்ஸ் அண்ட் ரிகவரி புராஜெக்ட்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

"முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் மற்றும் கொரியப் போர்களில் காணாமல் போன 27,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் இன்னும் உள்ளனர். அவர்களை எவ்வாறு தேட வேண்டும் என்ற தொழில்நுட்பம் நமக்குத் தெரியும்," என்று டெய்லர் கூறியுள்ளார்.

போரில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து மாயமான வீரர்களைத் தேடும் பணியை மத்திய அரசே முன்னின்று நடத்த வேண்டும் என்று அலிசியாவும் பேராசிரியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்திடம் இருந்து இன்னும் முறையான பதில் கிடைக்காத நிலையில், நிதி திரட்டியாவது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தங்கள் குடும்பப் பெரியவரின் உடலை கனடாவிற்கு கொண்டு வரப் போவதாக அலிசியா உறுதியுடன் தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US