கனடாவில் ஒரு வாரமாக தேடப்பட்டு வரும் ஆறு வயது குழந்தை
கனடாவில் கடந்த ஒரு வாரமாக ஆறு வயது குழந்தையொன்றை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தென் அல்பேர்ட்டா பகுதியில் இந்த குழந்தை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆறு வயதான மாரியோஸ் மெக்டாகோல் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனைத் தேடுவதற்கு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகாரிகளும் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுவதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவன் ஆட்டிசிம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொதுமக்களிடம் குடும்பத்தினரும் அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக சிறுவனை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுவனின் காணாமல் போதலுடன் குற்றச் செயல்களுக்கு தொடர்பிருக்காது என அதிகாரிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.