10 வருடங்களுக்குப்பின் எடுக்கப்பட்ட பாட்டியின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!
தங்கள் அன்பிற்குறிய பாட்டியின் உடலை புதைத்திருந்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் புதைக்க திட்டமிட்டது ஒரு குடும்பம்.
டொமினிக்கன் குடியரசில் வாழ்ந்துவந்த Margarita Rosario என்ற பெண்மணி, 10 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்துள்ளார்.சமீபத்தில் அவரது உடலைத் தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் புதைக்கத் திட்டமிட்டுள்ளது அவரது குடும்பம்.
அதற்காக Margarita Rosarioவின் உடலைத் தோண்டி எடுத்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. ஆம், Margaritaவின் உடல் புதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அவரது தலைமுடி கொட்டாமல் அப்படியே இருந்தது.
அதுமட்டுமின்றி, அவரது தோலும் பெருமளவில் பாதிக்கப்படாமல், அவர் புதைக்கப்படும்போது இருந்த உருவம் கிட்டத்தட்ட அப்படியே இருக்கவே, மக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். சொல்லப்போனால், அவரது உடலை நிற்க வைக்கக்கூட முடிந்தது.
Margarita உயிருடன் இருக்கும்போது பல தான தர்மங்கள் செய்வாராம். யாரைக் கேட்டாலும், அவர் அவ்வளவு நல்லவர் என்கிறார்கள்.இரக்கமும் நற்குணமும் கொண்டவராக வாழ்ந்துவந்ததால்தான், Margaritaவின் உடல் சேதமடையாமல் அப்படியே இருக்கிறது என நம்புகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இன்னொரு பக்கம், ஒருவர் இறந்த உடனேயே அவருடைய உடலை பதப்படுத்துவதால் அது சேதமடையாமல் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்த சிலர்.