ஈகாட் பட்டியலில் இடம் பெற்ற பிரபல பிரித்தானிய இசை கலைஞர்!
பிரபல பிரித்தானிய இசை கலைஞர் எல்டன் ஜான் தனது "எல்டன் ஜான் லைவ், ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் காணொளிக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.
குறித்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர் இருக்கும் வரிசையில் எல்டன் ஜான் இணைகிறார்.
எல்டன் ஜான் 1995 மற்றும் 2020 ஆண்டுகளில் "ராக்கெட்மேன்" மற்றும் "தி லயன் கிங்" போன்ற படங்களின் இசைக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராக் ஸ்டார் 2022 "டோட்ஜர் ஸ்டேடியம்" ஸ்பெஷலுக்கான சிறந்த பிரிவில் அவரது ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் என்ற லைவ் வீடியோ விருதை பெற்றுள்ளது.