பாடசாலை முன்பு நடந்த கொடுஞ்செயல்... புகைப்படம் வெளியிட்ட கனேடிய பொலிஸ்
ரொறன்ரோவில் பாடசாலை முன்பு இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலைஞரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் 3.20 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் 18 வயது ஜெபர்சன் பீற்றர் என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் காயங்கள் காரணமாக குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனையை நாடிய 15 வயதான இளைஞர் தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 17 வயது முஸ்தபா காதேம் என்ற இளிஞரை அடையாளம் கண்டுள்ளதாகவும், இரண்டாம் நிலை கொலை வழக்கு தொடர்பாக தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இளைஞர் ஆயுததாரியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் கவனமுடன் அணுக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.