இளம்பெண்ணின் தலையில் சிசிரிவி கமராவை மாட்டிய தந்தை! வைரல் வீடியோ
பாகிஸ்தான் நாட்டில் தந்தை ஒருவர், தனது மகளின் பாதுகாப்புக்காக தலையில் சிசிரிவி கமராவை பொருத்திய சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதுவும், 24x7 என்ற ரீதியில் அந்த பெண்ணின் தலையிலேயே 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் சிசிரிவியை மாட்டியுள்ளார்.

குறித்த பெண் எந்தவொரு சலனுமும் இன்றி சிசிரிவி தலையுடனேயே உலா வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் குறித்த பெண் கூறுகையில்,
தனது மகளுக்கு எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கி விட கூடாது என்பதற்காகவே இந்த செயலில் தந்தை இறங்கியுள்ளதாக இளம்பெண் கூறியுள்ளார்.
Pakistan??
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024
pic.twitter.com/Hdql8R2ejt
எனது தந்தை எது செய்தாலும் அதை முழு மனதுடன் ஏற்பேன் என்று, அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
பாதுகாப்பு என்ற பெயரில் இளம்பெண்ணின் தலையில் சிசிரிவை மாட்டி விட்டது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான் என்று சமூகதளவாசிகள் கூறுகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        