அரச ஊழியர்கள் தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு
பெரும் எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என கனடாவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவைத் தலைவர்ஸ்டீவன் மாகினன் பொதுச் சேவை பணிநீக்கங்கள் “குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பணிநீக்கங்கள் குறைந்த அளவிலேயே இருக்கும் எனவும் அதுவே எங்களது நோக்கம்,” எனவும் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் வழங்கும் பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை நாற்பதாயிரமாக குறைப்பது தெடர்பில் நிதி அமைச்சர் ஃப்ரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்திருந்தார்.
எனினும் அரச சேவையில் பெருமளவில் ஆட்குறைப்பு செய்யப்பட மாட்டாது என அவைத் தலைவர் ஸ்டீவன் மாகினன் தெரிவித்துள்ளார்.