கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனடா எடுக்கும் முக்கிய தீர்மானம்
எல்லை பகுதிகளில் கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனடாவின் சமஸ்டி அரசாங்கம் விரைவில் தீர்மானம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் எல்லைப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கோவிட் 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சமஸ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுமாறான கோவிட் பரிசோதனைகள், கோவிட் தடுப்பூசி மற்றும் அரைவ்கன் செயலி ( ArriveCan app)ஆகிய நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி தொடர்பிலான நடைமுறை கனியர்களுக்கு தளர்த்தப்பட்டாலும் வெளிநாட்டு பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல்வேறு கோவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் தளர்வினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை