இலங்கையில் கிணற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற பெண் சடலம்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து வயோதிபபெண் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களர்பு வெளிச்ச வீட்டுவீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய வள்ளித்தங்கம் கந்தசாமி என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபபெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் சம்பவதினமான இன்று காலையில் அவரின் பிள்ளைகள் அங்கு சென்றபோது அவரை வீட்டில் காணதநிலையில் அவரை அங்கு தேடியபோது அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் இருப்தை கண்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.