கனடிய சுகாதாரத்துறை குறித்து விடுக்கப்படும் எச்சரிக்கை
கனடாவில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சில குடும்ப மருத்துவர்கள் ஓய்வு பெற்றுக்கொள்வதுடன் சில குடும்ப மருத்துவர்கள் வேறும் துறைகள் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மருத்துவ மாணவர்களில் அதிகளவானவர்கள் குடும்ப நல மருத்துவ துறையை தெரிவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை உக்கிரமடைவதற்கு முன்னதாக தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென ஒன்றாரியோ மருத்துவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் 2.3 மில்லியன் பேருக்கு அடிப்படை குடும்ப நல மருத்துவ சேவை கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு காலப் பகுதியில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.