FIFA உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டி அர்ஜென்டினா அணிக்கும் குரோஷியா அணிக்கும் இடையே இடம்பெற்றது.
இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.
அர்ஜென்டினா அணிக்கும் குரோஷியா அணிக்கும் இடையேயான அரையிறுதி போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இந்த போட்டியின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் அல்வொரெஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரெஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இதயைடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா இறுதி போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.