கனடாவின் பாடசாலை ஒன்றிற்குள் கடும் மோதல்; 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கனடாவின் பாடசாலை ஒன்றிற்குள் கடுமையான மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
றொரன்டோவி ஹோக்வில் பகுதியின் கெரத் வெப் பொது பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்திற்குள் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது மூன்று பேர் காயமடைந்த நிலையில் இருப்பதனை அவதானித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாடசாலையின் மாணவர்களா இல்லையா என்பது குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலை முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் 905-825-4777 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.