பிரம்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!
கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரம்டன் முதியோர் இல்லமொன்றில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரம்டன் மெக்கார்டி பிளேஸ் மற்றம் குயின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த முதியோர் இல்லம் அமைந்துள்ளது.
தீ விபத்துச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீல் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கட்டிடத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இருப்பிடத்தை இழந்தவர்களுக்கு தீயணைப்பு படையினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.