புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு அருகில் பயங்கர தீ விபத்து (Video)
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
டவுன்டவுனில் உள்ள எமார் பவுல்வார்டு வாக் கட்டிடத்தில் அதிகாலை 2.20 மணியளவில் தீப்பற்றியது. இதனையடுத்து, தீயானது வேகமாக கட்டிடத்தின் மேல்நோக்கி பரவத்தொடங்கியது.
1/ #Dubai
— David Kime (@CyberRealms1) November 7, 2022
The Emaar skyscraper of the largest developer in Dubai partially burned down
The fire started early this morning near the Burj Khalifa, the tallest building in the world. pic.twitter.com/frFKZI1zu9
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 4.00 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.