ரொறன்ரோவில் தீ விபத்து: இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
ரொறன்ரோவின் பார்கடேலில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பார்கடேலின் South குடியின் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சம்பவத்தின் போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் வழங்க தீயணைப்புப் படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த படையினர் ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் வீட்டுக்குள் இருப்பதனை அவதானித்ததாகவும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இந்த வீட்டில் மூன்று பேர் வசித்துள்ளனர் எனவும், ஒரேயொரு நபரை பாதுகாப்பாக மீட்டதாகவும் எஞ்சிய நபரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.