அமெரிக்க விமானம் ஒன்றில் தீ விபத்து ; அலறியடித்து ஓடிய பயணிகள்
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில், இன்று காலை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மியாமிக்கு புறப்படவிருந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தமாக 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சம்பவத்தில் பயணி ஒருவருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.