பதவி நீக்கப்பட்ட அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகருக்கு புதிய நியமனம்
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மைக் வால்ட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பதவி நீக்கத்துக்கான காரணம்
அவருக்குப் பதிலாக, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ, தற்காலிகமாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மைக் வால்ட்ஸ், அமெரிக்க இராணுவத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்ற தொடர்பாடல் குழு ஒன்றில், தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவரது இலக்கத்தையும் இணைத்தமையே அவரது பதவி நீக்கத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற முதலாவது சிரேஷ்ட நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.