போராட்டத்தின்போது பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூடு!
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து ஈரான் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான தகவலை பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, மார்ப்பு பகுதியை குறிவைத்து பால்ரஸ் குண்டுகள் கொண்ட துப்பாக்கி மூலம் ஈரான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி குண்டு காயம்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறுகையில்,
20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது பிறப்புறுப்பில் 2 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளன.
மேலும், 10 குண்டுகள் அவரது தொடையில் பாய்ந்துள்ளது. 10 குண்டுகளையும் சுலபமாக எடுத்துவிட்டோம்.
ஆனால், அந்த 2 குண்டுகளை எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அந்த 2 குண்டுகளும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் ஆழமாக பாய்ந்துள்ளது' என்றார்.
மேலும், பெண்களை போன்றே ஆண்கள் மீது குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் ஆண்களின் கால்கள், புட்டம், முதுகு பகுதியில் பால்ரஸ் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.