ஜேர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி அமைப்பு; விடைபெறுகின்றார் ஏஞ்சலா மெர்கல்!

government election angela merkel 3-party
By Sulokshi Sep 28, 2021 06:53 AM GMT
Report

ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜேர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளது.

Bundestag என அழைக்கப்படும் ஜேர்மனி நாடாளுமன்றத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நேற்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று உடனடியாக எண்ணப்பட்டு வருகின்றன.

299 தொகுதிகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.9 தவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஏஞ்சலா மெர்க்கெலின் (angela merkel) கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் 24.1 சதவீத வாக்குகளைப் பெற்று குறைந்த வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை கட்சி 14.8 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் ஏஞ்சலா மெர்க்கெலின் (angela merkel)கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறங்கிய அர்மின் லாஷெட் ( Armin Laschet ), மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இது குறித்து CDU கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், அர்மின் லாஷெட் ( Armin Laschet)கூறுகையில், எங்கள் கட்சி ஆட்சியில் அமர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஜேர்மனியை நவீன நாடாக மாற்ற தற்போது கூட்டணி ஆட்சி தேவைப்படுகிறது என்றார்.

இதேவேளை ஏஞ்சலா மெர்க்கெலின் (angela merkel) கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், இரண்டாவது உலக போருக்கு பின்னர் தற்போதைய தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

1990 முதல் ஏஞ்சலா மெர்க்கெல் (angela merkel)வெற்றி பெற்ற நாடாளுமன்ற தொகுதி, தற்போது சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் வசம் சென்றுள்ளது. இதனையடுத்து அதிக சதவிகித வாக்குகளை பெற்றுள்ள சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கூறுகையில்,

சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது. பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மிகுந்த வலிமையான கட்சியாக வலம் வருவோம்.

எனினும் எந்த கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற தவறவிட்டதால், மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கப்படும். ஜேர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை ஆகும் என தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US