இலவச டம்பான்களை வழங்கும் உலகின் முதல் நாடு
ஸ்கொட்லாந்தில் மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை சட்டப்பூர்வமாக அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.
இதனையடுத்து கவுன்சில்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை தேவைப்படுபவர்களுக்கு இலவச சுகாதாரப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை முன்னெடுப்பார்கள்.
கடந்த 2017ல் இருந்தே சுமார் 27 மில்லியன் பவுண்டுகள் பொதுமக்களுக்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கலுக்காக செலவிட்டுள்ளனர். ஸ்கொட்லாந்தின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் MSP Monica Lennon முன்மொழிந்த மசோதாவானது 2020ல் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
தற்போது மாதவிடாய் காலத்து சுகாதாரப் பொருட்களை வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்கொட்லாந்து மாறியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆதரவளிக்கும் நிறுவனங்களே இந்த முயற்சி சாத்தியமாக உறுதுணையாக இருந்ததாக MSP Monica Lennon தெரிவித்துள்ளார்.
2018 முதல், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்களை வழங்கி வருவதாகவும், இது பலராலும் சிறப்பான செயல் என பாராட்டப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை செயலாளர் ஷோனா ராபிசன் தெரிவித்துள்ளார்.