இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது.
கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.