நீண்ட இடைவெளியின் பின்னர் நியூஸிலாந்துக்குச் சென்றுள்ள முதல் சொகுசுக் கப்பல்!
COVID-19 நோய்ப்பரவல் தொடங்கியதற்குப் பிறகு, முதன்முறையாகச் சொகுசுக் கப்பலொன்றை நியூஸிலாந்து, வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புறப்பட்ட Pacific Explorer எனும் அந்தச் சொகுசுக் கப்பல் ஆக்லந்தின் துறைமுகத்தில் அணைசேர்ந்துள்ளது.
பிஜியிலிருந்து (Fiji) தொடங்கிய 12 நாள் இருவழிப் பயணத்தின் ஓர் அங்கம் அது. வழக்கம்போல் வர்த்தகத்தைத் தொடர்வதில் மேலும் ஒரு படி முன்னேறியிருப்பதை அது காட்டுகிறது என நியூஸிலந்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்டூவர்ட் நாஷ் (Stuart Nash) கூறியுள்ளார்.
அத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர், நியூஸிலந்து எஞ்சிய எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது.
மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நியூஸிலந்து 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அதன் எல்லைப் பகுதிகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.