பிரான்சில் பிறந்த முதல் பண்டா கரடி; சீனாவுக்கு பார்சல்!
Yuan Meng என பெயர் கொண்ட பண்டா கரடி, விரைவில் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ZooParc de Beauval மிருகக்காட்சி சாலையில் Yuan Meng பண்டா கரடி பிறந்தது.
தற்போது ஐந்து வயதை நெருங்கும் குறித்த பண்டா கரடி, வரும் ஜூலை 4 ஆம் திகதி சீனாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
அதன்படி இனப்பெருக்கத்துக்காக பண்டா கரடி சீனா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக ZooParc de Beauval மிருகக்காட்சி சாலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ZooParc de Beauval மிருகக்காட்சி சாலைக்கு பயணித்திருந்தார்.
சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ள பண்டா கரடியை பார்வையிட்டிருந்தார்.
மேலும் குறித்த பண்டா கரடிக்கு பெயர் சூட்டிய பிரிஜித், அதன் வளர்ப்புத் தாயாகவும் உள்ளார்.