டுவிட்டரை வாங்கியதும் எலான் மஸ்க் பதிவிட்ட முதல் டுவிட்! என்ன தெரியுமா?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.
இருப்பினும், டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை அந்த நிறுவனம் முறையாக வழங்க முன்வரவில்லை என குற்றம் சாட்டிய எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக டுவிட்டரை வாங்கும் ஒப்பந்த்தை மீண்டும் தொடர விரும்புவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 28-ம் திகதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி டுவிட்டரை கையகப்படுத்தும் பணிகள் இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) முடிந்துவிடும் என எலான் மஸ்க் தனது பங்குதாரர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பில் 'டுவிட்டரின் தலைமை' என மாற்றியுள்ளார்.
இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு சென்ற எலான் மஸ்க் கைக் கழுவப் பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
அதனை வீடியோவாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
அதில் 'டுவிட்டர் தலைமையகத்துக்குள் நுழைந்துவிட்டேன். இனி அதில் மூழ்கட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், முதல் டுவிட் ஆக பறவை சுதந்திரம் பெற்றது என்று பதிவிட்டுள்ளார்.