இந்தியா, சீனா மீது 100% வரி ; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித வரி உள்பட மற்றும் சீனாவுக்கும் அமெரிக்கா வரியை விதித்தது.
இருப்பினும், இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவிகித வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்களிடம், நீங்கள் 100 சதவிகித வரியை விதித்தால், நாங்களும் 100 சதவிகித வரியை விதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்தியாவுடனான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்திருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.