வெடிகுண்டை பின்புறத்தில் சொருகிய முதியவர்! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
பிரான்ஸில் முதியவர் ஒருவரின் பின்புறத்தில் இருந்து 20 செ.மீ., நீளம் மற்றும் 2 அங்குல அகலமும் உள்ள வெடிகுண்டை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ளது செயின்ட் மூஸ்ஸே மருத்துவமனை.
இந்த மருத்துவமனைக்கு 88 வயது முதியவர் ஓடிவந்தார். அவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
பின்னர் மருத்துவர்கள், முதியவரின் பின்புறத்தில் இருந்து 20 செ.மீ., நீளம் மற்றும் 2 அங்குல அகலமும் உள்ள வெடிகுண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அந்த வெடி குண்டு முதலாம் உலகப் போரைச் சேர்ந்த குண்டு, முதியவரின் உடலுக்குள் வெடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
An 88-year-old Frenchman presented at Toulon A&E yesterday with a First World War shell shoved up his arse. Bomb disposal were called to make it safe. The hospital was evacuated. I wish this was a joke. pic.twitter.com/IS2u9kUqBO
— A common lawyer (@acommonlawyer) December 20, 2022
முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை திணித்துள்ளது தெரியவந்தது.