கனடாவின் இந்த ஐந்து நகரங்களுக்கு இப்படியொரு அவப்பெயரா?
கனடாவின் ஐந்து நகரங்கள் தொடர்பில் சுற்றுலாப் பயணிகளினால் எதிர்மறையான விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான நகரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள கனேடிய நகரங்கள் சில தொடர்பில் இவ்வாறு விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்ய பொருத்தமான நகரங்கள் என மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்படும் உலக நகரங்களின் வரிசையில் ஐந்து கனேடிய நகரங்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
றொரன்டோ, மொன்றியல், வான்கூவார், ஒட்டாவா மற்றும் கியூபெக் நகரம் என்பன இவ்வாறு மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகரிற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் எந்தளவிற்கு ஏமாற்றமடைகின்றார்கள் என்பதன் அடிப்படையில் இந்த உலக தர வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.
றொரன்டோவிற்கு விஜயம் செய்யும் 10.9 வீதமான சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொன்றியலுக்கு விஜயம் செய்யும் 10.3 வீதமான சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.