டொராண்டோவில் விமானப் பயணங்கள் பாதிப்பு
டொராண்டோவின் இரு விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பனியை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், சில விமான சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பில்லி பிஷப் விமான நிலையத்திலும் காலை நேரங்களில் தாமதம் காணப்பட்டாலும், 8.30 மணிக்குப் பிறகான பெரும்பாலான விமானங்கள் நேரத்துக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் விமான நிலையம் செல்லும் முன் தங்கள் விமான நிலையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பனிப்பொழிவு காரணமாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்புடுகின்றது.
இதுவரை 70 முதல் 80 வரை விபத்து அழைப்புகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பொறிகள் சாலைகளை சுத்தம் செய்ய வசதியாக டான் வேலி பார்க்வேயின் பெரும்பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், அவசரம் இல்லாவிட்டால் சாலைகளில் பயணிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.