போலந்தில் மக்கள் கூட்டத்திற்குள் துப்பாக்கிச் சூடு ; 5 பேர் உயிரிழப்பு
போலந்தின் கிராகோவ் (Krakow) நகரின் முக்கிய சந்தை சதுக்கத்தில் (market square) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று (07) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிற்றூந்தில் சந்தை சதுக்கத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், சிற்றூந்தின் உள்ளிருந்தவாறே அப்பகுதியிலிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிப் பரிமாற்றத்தின் போது சந்தேகநபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அவசர நோயாளர் காவு வண்டி சேவைகள் அனுப்பப்பட்டதோடு, காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.